கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோர்... கள்ளக்குறிச்சி , சேலம் மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேரில் ராமநாதன் மற்றும் ஏசுதாஸ் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில்.. உயிரிழப்புக்குக் காரணமான 20க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதில் 10 பேரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடிருக்கும் சிபிசிஐடி, இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.