பள்ளிக்கு அருகில் ஆபத்து.. கள்ளக்குறிச்சி பெற்றோர்கள் கோரிக்கை

Update: 2024-07-24 17:49 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை இன்னாடு கிராம அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விடுதி இல்லாததால் கடும் அவதி அடைந்துள்ளனர்...

இப்பள்ளியில் கிட்டத்தட்ட 650 மாணவர்கள் படித்து வரும் நிலையில், தங்கி படிக்க ஏதுவாக விடுதிகள் இல்லாத காரணத்தால் புதிதாக விடுதி கட்ட தமிழக அரசு சார்பில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது... கட்டுமான பணிக்காக பள்ளங்கள் தோண்டி கம்பிகள் நடப்பட்ட நிலையில் அதன்பிறகு ஓராண்டால எந்த பணியும் நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... இதனால் மாணவ மாணவிகள் வகுப்பறையையே விடுதியாக்கி பயன்படுத்தி வருகின்றனர்... உணவு அருந்த உள்ளே இடம் இல்லாமல் வெளியில் மண் தரையில் தான் அமர்ந்து சாப்பிடுகின்றனர்... உண்டு...தங்கி...அங்கேயே படிக்க வழிவகுக்கும் உண்டு உறைவிட பள்ளியில்... உண்ணவோ...தங்கவோ இடமின்றி வெறும் படிக்க மட்டும் இடமிருக்கும் நிலையில், விடுதியை விரைந்து கட்டித்தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்