தென்காசி அருகே கபடி வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமனார் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வீடியோ வெளியிட்ட நிலையில், திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். கபடி வீரரான இவருக்கு பாவூர்சத்திரம் அடுத்துள்ள செட்டியூர் பகுதியை சேர்ந்த பகவதி என்பவருடன் திருமணமாகிய நிலையில், மனைவி கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் மாமனார் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை கடிதம் எழுதி வைத்தும், வீடியோவாகவும் பேசி வெளியிட்ட அருணாச்சலம், திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இளைஞர் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.