- தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா
- தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா
- 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்
- பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்
- முதலமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம் ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்
- புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது