விடிய விடிய கொட்டிய மழை.. குளுகுளுவென மாறிய தமிழகம்.. குஷியான மக்கள்

Update: 2023-08-31 06:31 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேட்டப்பட்டு, ராமகிருஷ்ணாபுரம், மல்லகுண்டா, கேத்தாண்டி பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

ஆலங்காயம் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நள்ளிரவில் புதுச்சேரியில் திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. புதுச்சேரி நகரப் பகுதி மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக பூமி குளிர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ஈரோடு மாநகரில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். குளிர்ந்த சூழல் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்