"சிலிண்டர் வெடித்ததாக சொன்னார்கள்""விமானம் விழுந்தது போன்று இருந்தது சத்தம்"
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டை அருகே கோடங்கிபாளையம் பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு பெரும் வெடிச்சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த விபத்தில், விவசாயி ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. குவாரியில் இருந்த அலுவலகம் மற்றும் ஊழியர்கள் தங்கும் அறை இடிந்து சேதமாயின. தீபாவளி விடுமுறைக்காக தொழிலாளர்கள் சென்றிருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. வெடித்தது சிலிண்டரா? வெடி பொருளா என விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் வைத்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெடி பயன்படுத்துவதால் அச்சத்துடன் இருப்பதாக கண்ணீருடன் தெரிவத்துள்ள பொதுமக்கள், தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.