ஈஷா வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2024-10-01 07:45 GMT

#ishayogacenter #madrashighcourt

கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அக்டோபர் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் இரு மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது,

மனுதாரர் தரப்பில், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஆதி திராவிடர் பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தச் சென்ற ஈஷா அறக்கட்டளை மருத்துவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் பல சந்தேகங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், உண்மையை கண்டறிய வேண்டும் என்பதால், ஈஷா யோகா மையத்துக்கு எதிராக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விவரங்களை, அக்டோபர் 4ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்