கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜகவா..? திமுகவா..? - முட்டி மோதும் திமுக Vs பாஜக!

Update: 2023-10-27 04:31 GMT

பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம் அம்பலமாகி உள்ளது என்று, திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூறியுள்ளது.

vovt

கிண்டி ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் அருகே கருக்கா வினோத் என்பவர் புதன்கிழமை மாலை பெட்ரோல் குண்டை வீசினார். இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச வந்த நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து சாதுரியமாக செயல்பட்டதாகவும் காவல் துறை கூறியுள்ளார். ஆளுநர் மாளிகை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்தது. இதுகுறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த ஆண்டு கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி கைதான கருக்கா வினோத்தை, திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார் ஜாமினில் எடுத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பாஜகவின் தனக்குத்தானே வெடிகுண்டுத் திட்டம் அம்பலமாகி உள்ளது என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்