நாடே எதிர்பார்த்த எலக்சன் ரிசல்ட் அன்று நடந்த திடீர் மாற்றம்.. உச்சநீதிமன்றத்தில் மனு

Update: 2024-06-08 03:30 GMT

மக்களவைத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளன்று பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கும், செபிக்கும் உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில், இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியமான செபியின் விசாரணையில் சந்தேகம் கொள்ள முடியாது என்று கூறியிருந்தது. இந்திய முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதா என அறிய மீதமுள்ள இரு வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களில் முடிவுக்கவும் செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்குரைஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதானி - ஹிண்டன்பர்க் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு செபிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் பங்கு சந்தை வீழ்ச்சியால் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், இதுதொடர்பாகவும் அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கும், செபிக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்