சட்டத்தை திருத்தி இறுக்கிய பின் தமிழகத்தில் முதல் வழக்கு பதிவு.. கைதானவருக்கு ஆயுள் கிடைக்க வாய்ப்பு

Update: 2024-07-18 02:51 GMT

சட்டத்தை திருத்தி இறுக்கிய பின் தமிழகத்தில் முதல் வழக்கு பதிவு.. கைதானவருக்கு ரூ.10 லட்சம் பைனுடன் ஆயுள் கிடைக்க வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் மதுவிலக்குத் திருத்தச்சட்ட சட்டத்தின் கீழ் முதன்முதலாக கடையநல்லூரில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 67 பேர் பலியானதை அடுத்து, தமிழக சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், மதுபானங்களை விற்றால் 10 லட்சம் ரூபாய் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் முதன் முறையாக தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்