"எனக்கு இந்தி தெரியாது.. இப்படியே சொல்கிறேன்" - வாதத்தின் நடுவே ஐகோர்ட் நீதிபதி கருத்து

Update: 2024-01-25 06:21 GMT

எனக்கு இந்தி தெரியாது.. இப்படியே சொல்கிறேன்" - வாதத்தின் நடுவே ஐகோர்ட் நீதிபதி கருத்து

தனக்கு இந்தி தெரியாது என்பதால், குற்றவியல் சட்டங்களை ஆங்கில பெயர்களிலேயே குறிப்பிடுவதாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்...

கடந்த 75 ஆண்டுகளாக அமலில் இருந்த ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி. ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அவற்றிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் குற்ற வழக்குகளை விசாரணைக்கு எடுப்பதற்கான காலவரம்பு தொடர்பான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்தார். அப்போது புதிய சட்டத்தின் பெயர்களை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரால் உச்சரிக்க முடியவில்லை. இதையடுத்து, குற்றவியல் சட்டங்களை இந்தி பெயரில் புதிய சட்டமாக இயற்றியிருந்தாலும், தனக்கு இந்தி தெரியாது என்பதால் பழைய பெயர்களான ஐ.பி.சி, சி.ஆர்.பி.சி. என ஆங்கில பெயர்களிலேயே தொடர்ந்து குறிப்பிடுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்