பிசாசாய் கணவர் டார்ச்சர்... தந்தை வீட்டிலும் கொடுமைஅநியாயமாய் பறிபோன உயிர்..! சென்னையில் பரபரப்பு

Update: 2024-05-03 14:04 GMT

சென்னை அடுத்த வெற்றிலை தோட்டம் பகுதியை சேர்ந்த மரிய ஏஞ்சல், கணவர் கொடுமை செய்வதாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம் பூந்தமல்லியில் உள்ள தனது தந்தை அந்தோணி குரூஸ் வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால், அந்தோணிக்கும், அவரது வாரிசுகளுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததால், தந்தை வீட்டிலும் மரிய ஏஞ்சலுக்கு கொடுமை அரங்கேறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மன உளைச்சலில் இருந்து வந்த மரிய ஏஞ்சல், சரியாக சாப்பிடாமல் மாத்திரை மட்டுமே எடுத்துக்கொண்டதால் உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மரிய ஏஞ்சல் உயிரிழந்த நிலையில், மரணத்திற்கு நீதி கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்