ஊதாரியாக சுற்றி ஊருக்கு தொல்லை.. மகனுக்கு கழுத்தில் சுருக்கு போட்ட தந்தை

Update: 2024-05-14 09:49 GMT

ஓசூர் அருகே, குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றி தொல்லை கொடுத்து வந்த மகனை, தந்தையே கொலை செய்து தற்கொலை செய்த‌தாக நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஓசூர் அருகே அச்செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்நாத் ரெட்டி. இவர், தனது மூத்த மகன் ஜெய்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். காவல்துறையினர் சென்று பார்த்தபோது, ஜெய்தீப் கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த கயிறுக்கும் தூக்கில் தொங்கிய கயிறுக்கும் வித்தியாசம் இருந்த‌தை கண்டுபிடித்தனர். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தந்தை பிரேம்நாத் ரெட்டியிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது, கழுத்தை நெரித்து கொன்றதாக பிரேம்நாத் ரெட்டி கூறியுள்ளார். குடித்துவிட்டு ஊதாரியாக சுற்றியதோடு, நண்பர்களுடன் சுற்றித்திரிந்து பணத்தை செலவிட்டு, வீட்டில் உள்ளோருக்கும் ஜெய்தீப் தொல்லை கொடுத்து வந்த‌தாக கூறியுள்ளார். தனது இளைய மகன் யஸ்வந்த் மற்றும் உறவினர் மஞ்சுநாத்துடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு, நாடகமாடியது. தெரிய வந்த‌து. இதையடுத்து, மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்