தலை வலி தாங்க முடியாமல் துடி துடித்த சிறுவன் பிரித்து பார்த்த டாக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-07-11 07:00 GMT

தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தையல் தாறுமாறாக போடப்பட்ட நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவன் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் தென்காசியில் நிகழ்ந்துள்ளது.

செங்கோட்டை அருகில் உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தோட்ட காவலாளியின் 10 வயது மகன் கவுசிக் கடந்த 7ம் தேதி சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சுத்தம் செய்யாமல் 14 இடங்களில் தையல் போட்டதாகக் கூறப்படுகிறது... அதற்கு அடுத்த தினமே சிறுவன் கடுமையான வலியால் துடித்த நிலையில், உடனடியாக சிறுவன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது... காயம் பட்ட இடத்தில் சீழ் வைக்குமளவு சென்றுள்ள நிலையில், மண் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்து அரச்ய் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் அலட்சியமாக செயல்பட்டு சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்