நொடிக்கு நொடி அதிகரிக்கும் நீர்வரத்து..! ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை | Hogenakkal

Update: 2024-07-28 02:37 GMT

கனமழை காரணமாக கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமங்கி, ஹேராவதி ஆகிய அணைகள் தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளதால்...

அந்த அணைகளுக்கு வரும் மழைநீர் முழுவதும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது...

அவ்வாறு திறந்து விடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லைக்கு இந்த மாதம் 14ஆம் தேதி முதல் வரத் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி முதல் நீர்வரத்து 12 ஆயிரம் கன அடிக்கு மேல் வந்தது.

எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கர்நாடக பகுதிகளில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து நேற்று முதல் நீர்வரத்து உயர தொடங்கியது...

நேற்று காலை 62 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து... இரவு ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்த நிலையில், இந்நிலையில், நேற்று காலை ஒரு லட்சத்து 41 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது...

கர்நாடகாவில் இருந்து நேற்று முன்தினம் 1.5 லட்சம் கன அடி நீர் வரை திறந்து விடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த நாள்களில் மேலும் நீர்வரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்