தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள
ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற
காவிரி நீரின் அளவு சற்று தணிந்துள்ளது.
கர்நாடக அணையில் இருந்து நீர் வெளியேற்றம்
குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் பகுதிக்கு
காவிரி நீர் வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து
70 ஆயிரம் கன அடியில் இருந்து, ஒரு லட்சத்து
5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
நீர்வரத்து குறைந்துள்ள போதிலும் ஒகேனக்கல்
காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசில் இயக்கவும்
விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.