காஞ்சிபுரத்தில், அதிகாரிகளால் மூடப்பட்ட, சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலை, உயர்நீதிமன்ற உத்தரவால் மீண்டும் திறக்கப்பட்டது.
பூக்கடை சத்திரத்தில் யாதவ மகா சபைக்கு சொந்தமான இடத்தில் அனுமதி பெறாமல் அழகுமுத்துக்கோன் சிலை திறக்கப்பட்டதால், சிலையை சுற்றி இரும்பு தகடுகள் வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து யாதவர் மகா சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலையை திறக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில், சிறை திறைந்து வைக்கப்பட்டது.
யாதவ மகா சபை நிர்வாகிகள் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினர்.