மாணவிகளுக்கு வெளியான நல்ல சேதி.. அதிரடி காட்டும் ஹைகோர்ட்

Update: 2024-09-27 04:21 GMT

அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், மாணவிகளுக்கு

சானட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள்

முறையாக பராமரிக்கப்படாமல், காட்சி பொருட்களாக

வைக்கப்பட்டு உள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி

வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் சென்னை

உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் மாணவிகளுக்காக தனி ஓய்வறைகள் கட்ட உள்ளதாக, தமிழக அர்சு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து,

அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறைகள் கட்டுவதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்