நடுங்க விட்ட இரவு... மண்ணோடு புதைந்த 229 உயிர்கள்... கதறும் குடும்பங்கள்... கலங்கடிக்கும் காட்சி

Update: 2024-07-24 09:27 GMT

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது.

அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காபா மண்டலத்தில், கனமழை காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளமானோர் மண்ணில் சிக்கினர். இதனையடுத்து, பொதுமக்கள், அவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அடுத்த நாள் மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவில், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களும் சிக்கினர். இதையடுத்து, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். இந்த பயங்கர சம்பவத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தால் தான் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாக பிரதமர் அபி அகமது தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்