வங்க கடலில் ஆட்டம் ஆரம்பம்.. தேதி குறித்து இடி, மின்னல், சூறாவளியுடன் வந்த எச்சரிக்கை

Update: 2024-08-26 12:44 GMT

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோர பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 29ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க‌க் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்