மேகம் வெடித்து கொட்டப்போகும் கனமழை.. நொடிக்கு நொடி மாறும் வானிலை

Update: 2024-07-01 13:51 GMT

நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது... மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரம், மத்திய மேற்கு வங்கக் கடல், தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திரக் கடலோரம், மத்திய அரபிக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள கர்நாடக கடலோரம் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்