உருவாக போகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..வெளுக்க போகும் கனமழை..வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உருவாக போகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..வெளுக்க போகும் கனமழை..வானிலை மையம் கொடுத்த வார்னிங்
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 15ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.