கன்னியாகுமரியில் வெளுத்தெடுத்த கனமழை... உடைந்த ஆற்றின் பக்கச்சுவர்

Update: 2023-10-24 14:33 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலூமூட்டுகடவு பகுதியில் உள்ள ஆற்றின் பக்கச்சுவர் உடைந்துள்ளதால், நடைபாதை சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டி உள்ளதாகவும், ஆற்றில் தவறிவிடும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் நடைபாதையை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்