- கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
- சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் புவனகிரி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 16 புள்ளி 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. லால்பேட்டையில் 11 சென்டி மீட்டர், கொத்தவாச்சேரியில் 10 புள்ளி 9 சென்டி மீட்டர், ஸ்ரீமுஷ்ணத்தில் 10 புள்ளி 7 சென்டி மீட்டர், காட்டுமன்னார் கோவிலில் 8 புள்ளி 7 சென்டி மீட்டர், புவனகிரியில் 8 புள்ளி 8 சென்டி மீட்டர், சிதம்பரத்தில் 6 புள்ளி 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.