வெளுத்து வாங்கிய கனமழை... வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் பலி... கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-10-04 04:29 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்கிழமையன்று சராசரியாக 25. 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மழையால் பூதப்பாண்டி அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான நிலையில், மாவட்ட முழுவதும் 9 மரங்களும் 3 மின்கம்பங்களும் சாய்ந்து உள்ளன. தொடரும் கனமழை காரணமாக வருவாய்த் துறையினர் தீயணைப்பு துறையினர் மின்சாரத் துறையினர் உள்ளிட்ட துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்