கொட்டி தீர்த்த கனமழை - குளம்போல் மாறிய சாலைகள் - தத்தளிக்கும் ராமேஸ்வரம்

Update: 2023-11-10 12:07 GMT

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமேஸ்வரம் தீவு பகுதிகளான பாம்பன், குந்துகால், அக்காள்மடம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனிடையே, ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்