உஷார் மக்களே...தமிழகத்தில் கனமழை...எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ? | Tamilnadu Weather
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், நீலகிரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு இலங்கை கடலோரம், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.