தமிழகத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை .. ரோட்டில் குளம் போல் தேங்கிய தண்ணீர் | TN Rain
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால், முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பசுபதிபுரம் மடவளாக பகுதியில், மழைநீர் வடிகால் நிரம்பி வழிந்ததுடன், சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.