அடுத்த 24 மணி நேரத்தில் புரட்டி போடப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Update: 2023-10-14 03:55 GMT

அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்