குவியல் குவியலாக ஆதார், பான் கார்டுகள் - சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

Update: 2023-09-02 03:10 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதி அருகே, குவியல் குவியலாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டன. புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி 6 வது வாசல் அருகே குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள் போன்றவைகள் கொட்டப்பட்டு கிடந்தன. விமானநிலையத்திற்கு வருபவர்கள், தங்களது ஆதார் மற்றும் பான் கார்டுகளை விட்டு விட்டு செல்வதாகவும், நீண்ட நாள் கேட்பாரற்று கிடக்கும் கார்டுகளை கொட்டி விடுவதாகவும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்