காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- நீட் தேர்வு முடிவுகளை நாளை மாலைக்குள் வெளியிடவும், தேர்வர்களின் அடையாளம் இருக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு... நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் வாதம் நம்பும்படியாக இல்லை என்றும் பரபரப்பு கருத்து...
- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் கைது...சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை...
- தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை... கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்...
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தேடி வரும் நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத் தலைவரான அஞ்சலை, கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்... தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன் அறிவிப்பு...
- நிலையான வளர்ச்சிப் பட்டியலில், தமிழ்நாடு 2ம் இடம் பெற்றுள்ளது... நிதி ஆயோக் வெளியிட்ட, 2023-24ம் ஆண்டிற்கான அறிக்கையில் தகவல்...
- தி.மு.க.வை பொறுத்தவரை வெறும் அறிவிப்பு மட்டும் தான் செயலில் ஒன்றும் இல்லை என சசிகலா விமர்சனம்...தி.மு.க. எம்.பி.க்கள் வீண் சண்டை போடாமல் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
- செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 48-வது முறையாக நீட்டிப்பு... 22ம் தேதிவரை காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...
- டி.என்.பி.எல். தொடரில் சேலம் அணிக்கு எதிரான போட்டி... 23 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி...