நொடி பொழுதில் பயங்கரம்... கண்மூடி திறப்பதற்குள் சிதறிய குடும்பம் - நொறுங்கிய மினி பஸ்
ஹரியானா மாநிலம் அம்பாலாவில், மினி பஸ் மீது டிரக் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வைஷ்ணோ தேவி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மது போதையில் இருந்ததாகவும், விபத்து நடந்த உடனே அங்கிருந்து அவர் தப்பியோடிவிட்டதாகவும் விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறியுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த 25 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.