குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. மக்களே மிக கவனம் தேவை!

Update: 2024-08-03 09:20 GMT

மதுரை, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளை ரத்து செய்தும் மற்றும் ஒரு சில ரயில்களின் சேவைகளை மாற்றம் செய்தும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.குருவாயூர் - சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது ஆகஸ்ட் 4, 5 , 8,10 ஆகிய நாள்களில் மதுரை, சோழவந்தான், திண்டுக்கல் வழியாக செல்வதற்கு பதிலாக மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக எழும்பூர் செல்லும்.சென்னை எழும்பூர் - குருவாயூர் இடையே காலை 9.45 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது ஆகஸ்ட் 4 அன்று

திண்டுக்கல், சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக குருவாயூர் செல்லும்.மயிலாடுதுறை - செங்கோட்டை இடையே மதியம் 12 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ரயிலானது ஆகஸ்ட் 8ஆம் தேதி திண்டுக்கல், சோழவந்தான், மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும்.குருவாயூர் - சென்னை எழும்பூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது ஆகஸ்ட் 16 முதல் 26ஆம் தேதி வரை கேரள மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும்.சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே மாலை 3.10 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலானது ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் எர்ணாகுளம் வழியாக செல்வதற்கு பதிலாக கோட்டயம் வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்