கவுன்சிலர்கள் திடீர் வாக்குவாதம் - நகர் மன்ற கூட்டத்தில் சலசலப்பு
கூடலூர் நகராட்சியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் "FITNESS" தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்படுவதாக நகர் மன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் பதிலளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டால், நகர் மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நிபந்தனைகளை கடைப்பிடிக்காத இந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.