அரசு பஸ்களை அலறவிட்ட மர்ம நபர்கள்.. நடுங்கிய பயணிகள்.. திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். பொன்னேரியில் இருந்து கள்ளூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் கண்ணாடியை, சின்னக்காவனம் பகுதியில் மர்ம நபர்கள் உடைத்தனர். அடுத்ததாக வரவழைக்கப்பட்ட மாற்று பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டதால் பயணிகள் அலறினர். இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருதரப்பினர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ததால் கண்ணாடி உடைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.