அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் கைது

Update: 2022-10-19 13:23 GMT

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் கைது

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கணித ஆசிரியர் சரவணகுமார் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ், ஆசிரியர் சரவணகுமாரை, மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியர், தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாக கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட ஆசிரியர் சரவணகுமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்