சென்னை மக்களுக்கு வந்த குட் நியூஸ்...இனி கோடையில் கவலையே வேண்டாம்...

Update: 2024-04-02 16:38 GMT

#thanthitv #chennai #water

சென்னை மக்களுக்கு வந்த குட் நியூஸ்...இனி கோடையில் கவலையே வேண்டாம்...

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஆறு முக்கியஏரிகளில், இன்று காலை நிலவரப்படி, மொத்தம் 787 கோடி கன அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு தினமும் வழங்கப்படும் குடிநீரின் அளவு 107 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவு, சென்னை நகரில் தினமும் 79.64 கோடி லிட்டராகவும், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் 20.4 கோடி லிட்டராகவும் உள்ளது.

லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரின் அளவு, சென்னை நகரில் தினமும் 1.7 கோடி லிட்டராகவும், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் 98.6 லட்சம் லிட்டராகவும் உள்ளது.

லாரிகள் மூலம் தொழிற்சாலைகளுக்கு தினமும் 1.37 கோடி லிட்டர் குடிநீரும், நகராட்சிகள் மற்றும் மொத்தமாக கொள்முதல் செய்பவர்களுக்கு தினமும் 2.95 கோடி லிட்டர் குடிநீரும் அளிக்கப்படுகிறது.வீராணம் ஏரி வற்றியுள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் நெமிலியில் உள்ள கடல் நீர் சுத்தீகரிப்பு நிலையத்தில் இருந்து அளிக்கப்படும் குடிநீரின் மொத்த அளவு தினமும் 40 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்