தென்காசி மாவட்டத்தில், வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, ஐந்தருவியில் குளிக்க 3 நாட்களுக்குப்பின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் கிளைகளில் மட்டும் நீர்வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். மெயின் அருவியில் தடை நீடிப்பதால் அங்கிருந்து ஐந்தருவி நோக்கி ஐயப்ப பக்தர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்