கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 22 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளார். உலியம்பாளையத்தில் ஞானசுந்தரம் என்பவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நகைகளைத் திருடிய மர்ம நபர், வீட்டில் இயற்கை உபாதை கழித்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.