ஜாங்கிரி கேட்டு கடை ஊழியரை தாக்கிய கும்பல் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Update: 2024-03-12 06:09 GMT

தூத்துக்குடியில் சிப்ஸ் கடைக்குள் புகுந்த கும்பல், ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வி.இ.சாலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த முருகன் என்பவர், சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், பணம் கொடுக்காமல், ஊழியர்களிடம் சிப்ஸ் மற்றும் இனிப்பு வகைகளை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஊழியர் குமார் என்பவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை அந்த கும்பல் சரமாரி தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சியை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்