சாவு ஊர்வலத்தில் பிணத்தின் தலை சரிந்ததால் பெரும் பதற்றம்.. மயானம் செல்வதற்குள் 11 ரத்த காவு
சாவு ஊர்வலத்தில் பிணத்தின் தலை சரிந்ததால் பெரும் பதற்றம்.. மயானம் செல்வதற்குள் 11 ரத்த காவு
விழுப்புரம் மாவட்டம் சோழனூரை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இறுதி ஊர்வலத்திற்காக உடலை எடுத்தபோது தலை சரிந்ததாக கூறப்படும் நிலையில், சரஸ்வதியின் சொந்த ஊரான வளவனூரை சேர்ந்த உறவினர்களுக்கும், சோழனூரை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வளவனூரை சேர்ந்தவர்கள் காயமடைந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளனர். ஆனால் சோழனூர் பகுதி நபர்கள் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து, வளவனூர் நபர்களை மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் முன்பாகவே தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, வளவனூரை சேர்ந்த பெண்கள் கண்ணீர்மல்க குற்றச்சாட்டை முன்வைத்தனர்.