"கலெக்டர் ஆஃபிஸில் வேலை.."ஒரே மாதிரி பொய்.. வெவ்வேறு வேலைக்கு - வாயை பிளக்க வைத்த சம்பவம்

Update: 2023-08-28 14:08 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோமதி. அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்த இவருக்கு, அங்கன்வாடி பணியாளரான தங்கமணி என்பவர் மூலம், திமுக பிரமுகர் இளையராஜா மற்றும் அரசு பள்ளி ஆசிரியரான ராஜேந்திரன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து அமைச்சர் முத்துசாமி மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 8 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கோமதி தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது கணேசன் என்பவர், டாஸ்மாக் பார் உரிமை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்ததாகவும், கோபிநாத் என்பவர், காவல் உதவி ஆய்வாளர் பணியிடம் வாங்கி தருவதாக 13 லட்சம் மோசடி செய்ததாகவும், இளையராஜா மீது குற்றஞ்சாட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்