சீட்டு நடத்தி செய்த மோசடி..பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்-அடுத்த நொடி அரக்கனாக மாறிய
போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே, தனபால் என்பவர் சீட்டு கட்டி ஏலம் விடும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், ஒரு லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையில் மாதந்தோறும் சீட்டு கட்டி வந்துள்ளனர். கடந்த ஆறு மாதமாக சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்காமல் தனபால் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் பணம் கட்டி விரக்தி அடைந்தவர்கள், அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, தனபால் திடீரென அலுவலக வாயிலின் கண்ணாடியை உடைத்து, கைகளில் கீறிக் கொண்டதுடன், உடலில் ரத்தம் வழிந்தபடி ஆக்ரோஷமாக அச்சுறுத்தவே, அங்கிருந்தவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியது.