ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - பின்னால் வந்த மினிவேனால் வந்த வினை
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர், தனது சொந்த ஆட்டோவில் இரண்டரை வயது மகனுடன் சென்றுள்ளார். ஆட்டோவின் பின்னால் செல்போன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், தவறி சாலையில் விழுந்துள்ளான். அப்போது பின்னால் இருந்து வந்த மினிவேன், சிறுவன் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி ரத்தவெள்ளத்தில் இருந்த சிறுவனை, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினிவேன் ஓட்டுநரை கைது செய்தனர்.