மலர் கண்காட்சி நாளை துவங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது... பிரையண்ட் பூங்காவில் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்ட செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன... சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வண்ணத்து பூச்சி, வீடு, பொம்மைகள், நெருப்பு கோழி, வான் கோழி ஆகிய உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாய் கண்காட்சி, மீன் பிடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் பந்தயம், விளையாட்டுகள் மற்றும் பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி, மேஜிக் ஷோ உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபெற உள்ளன... மேலும் இந்த வருடம் மாலை நேரத்தில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது... மேலும் மாற்று திறனாளி மற்றும் மாற்று திறனாளி உடன் வருபவர்களுக்கு நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட உள்ளது.