மீண்டும் வெள்ளப்பெருக்கு? - அதிர்ச்சியில் கன்னியாகுமரி மக்கள்

Update: 2023-10-17 04:53 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்துவரும் நிலையில், மலையோர பகுதிகளில் தற்போது மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி உள்ளது. இந்த மழை நீடித்தால் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் அரைமணி நேரமாக கனமழை பெய்தது. இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்ததால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திடீரென மழை பெய்ததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். திடீர் மழையில் நனைந்தபடி பேருந்துகளில் மாணவர்கள் அபாயகரமான முறையில் பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிபாளையம். மேலவேளி, களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்