கனமழை பெருவெள்ளத்தால் 8 மாவட்டங்களில் இதுவரை மாணவர்கள் 430 பேர் சான்றிதழ்களை இழந்துள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 430 பேர் புதிய சான்றிதழ் கோரி விண்ணப்பித்ததாகவும், அவர்களுக்கு புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.