மருத்துவமனைக்குள் பாய்ந்த வெள்ளநீர் - நோயாளிகள் அவதி

Update: 2023-11-05 16:24 GMT

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்ததால் நோயாளிகள் பெரும் சிரமம் அடைந்தனர். தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழைநீர் புகுந்து ஆறாக ஓடியது. முதியோர் உள்நோயாளிகள் பிரிவு, மத்திய ஆய்வக பிரிவு ஆகிய பகுதிகளிலும் மழைநீர் தேங்கியதால் உள் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்