ஆண்கள் வந்தாலே ரூ.5000 அபராத்தோடு போட்டு பொளந்து கட்டும் பெண்கள் - இப்படியும் ஒரு கிராமமா!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே பெண்கள் மட்டும் பங்கேற்கும் மலைவாழ் மக்களின் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
தொங்குமலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் இறுதி நாளில் பெண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம். இதன்படி நடைபெற்ற விழாவில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் ஊர்வலமாக வந்து, கும்மியடித்து, ஆட்டம் போட்டு பூஜை செய்து மகிழ்ந்தனர். விழா நடைபெறும் இடத்தில் எல்லை மீறி உள்ளே வரும் ஆண்களை, பெண்கள் அடித்து விரட்டுவதுடன் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.