கவர்ச்சிகரமான திட்டம்... ஆசை வார்த்தையில் விளம்பரம் - தொழிலதிபரை லாக் செய்த போலீஸ்
திருச்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் செய்து வரும் நிலையில், அதுதொடர்பாக கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அதில், ஆயிரத்து 200 சதுர அடி கொண்ட மனையை 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால், கட்டிய தொகையை 15 நாட்களுக்கு ஒரு முறை 12 ஆயிரம் ரூபாய் என திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மேலும், முதலீட்டாளர்களை சேர்த்து விடும் முகவர்களுக்கு, முதலீட்டாளர்கள் கட்டிய தொகையில் 12 சதவீதம் கமிஷன் தொகை தரப்படும் உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதில், முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அறிந்த பொதுமக்கள், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோபாலகிருஷ்ணனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்